சூடான் மோதலில் இந்தியர் உள்பட 100 பேர் பலி - என்ன நடக்கிறது? (காணொளி)

காணொளிக் குறிப்பு, சூடான் மோதலில் இந்தியர் உள்பட 100 பேர் பலி - என்ன நடக்கிறது? எளிய விளக்கம்
சூடான் மோதலில் இந்தியர் உள்பட 100 பேர் பலி - என்ன நடக்கிறது? (காணொளி)

சூடானின் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) எனப்படும் அந்நாட்டின் துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1,100 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பினரும் நாட்டின் தலைநகரான கார்டூம் நகரின் முக்கிய பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கார்டூம் நகர மருத்துவமனைகளில் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போர், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள், மற்றும் உபகரணங்கள் ஆகியவை மக்களிடம் சென்று சேர்வதைத் தடுத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சூடான் மோதல்

கார்டூம் நகரின் மக்கள் இடைவிடாத துப்பாக்கிச் சத்தங்கள், குண்டுவெடிப்புகளுக்கிடையே, 24 மணிநேரத்தைத் தூங்காமல் கழித்ததாகச் சொல்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: