காணொளி: தென்காசியில் 2 பேருந்துகள் மோதி விபத்து - நடந்தது என்ன?
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகல்லில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையிலிருந்து தென்காசிக்கும் தென்காசியில் இருந்து கடையநல்லூருக்கும் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மோதி பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 6 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 32 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இரண்டு தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், பேருந்தில் இருந்த ஏராளமான பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
மேலும், அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



