சமஸ்கிருதம் பற்றி இந்தோனீசிய அதிபர் கூறியது என்ன?
தனக்கு இந்திய டி என் ஏ இருப்பதாக இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற இந்தோனீசிய அதிபர் பிரபுவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் இந்தோனீசியாவும் இடையில் நீண்ட நெடிய வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளன என்று கூறிய அவர், " எங்கள் மொழியின் முக்கிய பகுதி சமஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளது. இந்தோனீசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதப் பெயர்கள். எங்களுடைய தினசரி வாழ்க்கையில் பண்டைய இந்திய நாகரிகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. இது எங்கள் மரபணுவின் ஒரு பகுதி என்றும் நினைக்கிறேன்" என்றார்.
மேலும், " சில வாரங்களுக்கு முன் மரபணு வரிசை முறை சோதனை மற்றும் மரபணு சோதனை செய்தேன். எனக்கு இந்திய மரபணு இருப்பதாக அவர்கள் கூறினர். இந்திய இசை கேட்கும் போது நான் நடனமாட தொடங்குவேன் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.
அவரது பேச்சின் முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



