இரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - என்ன நடந்தது? காணொளி
இன்று (சனிக்கிழமை, அக்டோபர்ப் 26) இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஏவுகணை உற்பத்தித் தளங்கள் உள்ளிட்ட இரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இரான் மற்றும் அதன் கூட்டாளிகள், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 முதல் இடைவிடாமல் இஸ்ரேலைத் தாக்குவதால், உலகிலுள்ள மற்ற எந்த சுதந்திரமான, இறையாண்மை உள்ள நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் அதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை இருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
இரான் தலைநகர் டெஹ்ரானில் அதிகாலை வேளையில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டது. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தியதன் காரணமாக இந்தச் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று இரான் உளவுத்துறை அதிகாரி கூறியதாக இரான் அரசுத் தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரான் ஏவியது. இதற்கு எந்த நேரத்திலும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
மேலும் தகவல்கள் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



