கென்யா: மாந்திரீகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு, நிலத்திற்காக கொலை செய்யப்படும் முதியவர்கள்!

காணொளிக் குறிப்பு, வாரத்திற்கு குறைந்தது ஒரு முதியவராவது இங்கு கொல்லப்படுவதாக கூறுகிறார்கள்.
கென்யா: மாந்திரீகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு, நிலத்திற்காக கொலை செய்யப்படும் முதியவர்கள்!

"நான் பிறக்கும்போது இப்படி இல்லை. மாந்திரீகம் செய்கிறேன் என்று என் மீது பழி சுமத்தி என் கைகளை வெட்டிவிட்டார்கள்." என்கிறார் முதியவர் கட்டானா சரா.

கென்யாவின் கடற்கரைப் பகுதிகளில், வயோதிகத்தின் அறிகுறிகள் ஒருவரை வாழ்வா சாவா என்ற சூழ்நிலைக்கு தள்ளுகிறது. நரை முடி, நோய் அல்லது துரதிர்ஷ்டம் கூட ஒருவரை சூனியக்காரர் என முத்திரை குத்த போதுமானது.

வாரத்திற்கு குறைந்தது ஒரு முதியவராவது இங்கு கொல்லப்படுவதாக கூறுகிறார்கள். பலரும் இங்கே சொந்த குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுகிறார்கள்.

கொலைக்கான உண்மையான காரணம் அவர்களது நிலம். கடற்கரைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகம்.

ஜூலியஸ் வான்யாமா, இந்தக் கொலைகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.

"வரலாற்று ரீதியாகவே, கிலிஃபி நகரத்தில் நிலங்கள் பதிவு செய்யப்படாது. அவர்களிடம் இருக்கும் ஆவணம் என்பது இந்த முதியோர்களின் கூற்று மட்டும்தான். இதனால் தான் பல முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றுவிட்டால் நிலத்திற்கான தடை நீங்கிவிடும்." என்கிறார் ஜூலியஸ்.

மேலும் விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)