'வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுவோம்' - கிராமப்புற தன்பாலின தம்பதியின் நம்பிக்கை

காணொளிக் குறிப்பு, கடைசிவரை ஒன்றாக வாழ்ந்துகாட்டுவோம் – நம்பிக்கையுடன் பேசும் தன்பாலினத் தம்பதி – காணொளி
'வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுவோம்' - கிராமப்புற தன்பாலின தம்பதியின் நம்பிக்கை

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்த தன்பாலினத் தம்பதிகள் தன்பாலினத் திருமணத்திற்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் வேண்டித் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று (அக்டோபர் 18) தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதில் தன்பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தனர்.

ஆனால், தங்கள் தீர்ப்பில் தன்பாலீர்ப்பு என்பது நகர்ப்புற அல்லது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல என்று கூறியிருந்தனர்.

நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களிடையேயும் தன்பால் ஈர்ப்பாளர்கள் உள்ளனர் என்றார்

தமிழகத்தின் கிராமப்புறத்திலிருந்து வந்த தன்பாலின ஈர்ப்புத் தம்பதிகளான சரவணன் கவியரசனும் இந்தத் தீர்ப்பினைப் பற்றியும் அவர்கள் கடந்துவந்த பாதையைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர்.

தயாரிப்பு: க. சுபகுணம்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

தன்பாலினதம்பதி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)