இந்தப் பறவையின் விலை ரூ.12 லட்சமா? - பாகிஸ்தானில் சிறகடிக்கும் வியாபாரம் - வீடியோ
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, பாகிஸ்தானில் அரிய ரக வண்ணப் பறவைகளை வளர்ப்பதற்கும் விற்பதற்கும் மக்களிடையே ஆர்வம் அதிகருத்து வருகிறது.
இது வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில் என்பதால், பலருக்கும் இது வருமனத்திற்கான வழியாக மாறியிருக்கிறது. இந்தியப் பண மதிப்பில் 6,000 ரூபாய் தொடங்கி, மிகவும் அரிதான பறவைகள் 15 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் லவ் பேர்ட்ஸ் எனப்படும் ஆப்பிரிக்க கிளிகள் மட்டுமல்ல. ஆஸ்திரேலிய கோல்டியன் பறவைகள், பஞ்சவர்ணக் கிளிகள் போன்ற பல அரிய வகைப் பறவைகளும் வளர்த்து விற்கப்படுகின்றன.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இது ஒரு முழுநேரத் தொழிலாக மாறி வருகிறது. உள்ளூரின் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்பவர்களும் இவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பறவைகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய, பாகிஸ்தானின் பறவை விற்பனையாளர்கள் இந்தத் தொழிலை குறுந்தொழிலாக அறிவிக்க அந்நாட்டின் வர்த்தகச் சபையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



