சிக்கன் குருமா: இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஒன்றாக எதிர்த்த சுவாரஸ்யம்

உணவு

பட மூலாதாரம், TWITTER @TASTYUK

    • எழுதியவர், ஒமேர் சலீமி
    • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்

குருமாவின் இந்த வடிவம் ஒரு 'குற்றம்'. இது குருமா என்றால் அதில் கீரையும் அரிசியும் ஏன் உள்ளது?

பிரிட்டனின் உணவு சேனல் 'டேஸ்டி யுகே' பிரியாணி, சிக்கன் டிக்கா போன்ற பிரபலமான தெற்காசிய ரெசிபிகளுடன் சிக்கன் குருமாவை இணைத்து சமூக ஊடகங்களில் அந்த வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோவால் இந்தியா, பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் சில சமையல் வகைகள் உள்ளன. அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அவற்றை தனித்துவம் வாய்ந்தவையாக ஆக்குகின்றன.

இந்த இரு நாடுகளிலும் 'சிக்கன் குருமா' மிகவும் பிரபலமான உணவு குழம்பு வகை. இது பெரும்பாலும் திருமணங்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றில் அசைவ உணவு வகையின் அங்கமாக பரிமாறப்படுகிறது. மற்ற நாடுகளிலும் இந்த வகை குழம்பு விரும்பப்படுகிறது.

பல இடங்களில் அதை அந்தந்த சமையல் கலைஞர்கள் தங்களுடைய சொந்த வழியில் சமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிக்கன் குருமா என்பது முகலாயர்களின் காலத்திலிருந்தே மிகவும் விரும்பப்படும் ஓர் உணவு. ஆக்ராவில் தாஜ்மஹால் திறப்பு விழா முதல் கடைசி முகலாய ஆட்சியாளர் பகதூர் ஷா ஜாஃபர் வரை, இது பற்றி அரச பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு

பட மூலாதாரம், TASTY.CO

டேஸ்டி யுகேவின் 'கிரிமினல்' சிக்கன் குருவில் என்ன இருக்கிறது?

டிசம்பர் 3 அன்று, டேஸ்டி யுகே தனது ட்விட்டர் கணக்கில் 'ஒன் பாட் சிக்கன் குருமா' என்ற தலைப்புடன் ஒரு செய்முறை வீடியோவை பகிர்ந்துள்ளது.

இந்த செய்முறை வீடியோவின் தொடக்கத்தில், கடாயில் சில துளிகள் எண்ணெயை ஊற்றிய பிறகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் கிராம்பு சேர்ப்பதாகக் காட்டப்பட்டது.

பின்னர் அதில் கோழியின் சில மார்புத்துண்டுகள் போடப்பட்டு, பொடியாக அரிந்த தக்காளி சேர்க்கப்பட்டது. இதற்குப் பிறகு, இரண்டு தேக்கரண்டி குருமா பேஸ்ட், இருநூறு கிராம் பாஸ்மதி அரிசி சேர்க்கப்பட்டது.

இதற்குப் பிறகு, அதில் ஒரு கியூப் சிக்கன் ஸ்டாக், இரண்டு கிளாஸ் தண்ணீர் மற்றும் 75 கிராம் உலர்திராட்சை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை அலுமினிய தாளால் மூடப்பட்டது. பின்னர் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கப்பட்டது.

அடுத்த 10 நிமிடங்களுக்கு அது சமைக்கப்பட்டது. பின்னர் அதில் 50 கிராம் கீரையும் சிறிது தயிரும் சேர்க்கப்பட்டது. இறுதியில் பச்சை கொத்தமல்லி சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் பரிமாறப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

"இந்த குருமா ஒரு 'குற்றம்”

'முர்க் கோர்மாவின்' (சிக்கன் குருமா) இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அதை விரும்பவில்லை. அது குறித்து கேள்விகளையும் எழுப்பினர்.

இதில் கீரை மற்றும் அரிசி சேர்க்க தேவையில்லை என்றும் இது பாரம்பரிய கோர்மா இல்லை என்றும் பலர் எதிர்த்தனர். இது கிட்டத்தட்ட உலர்வாக காணப்பட்டது.

ஆனால் பொதுவாக சிக்கன் கோர்மா குழம்பு போல இருக்கும். சாதம் அல்லது ரொட்டியுடன் அது உண்ணப்படுகிறது.

தெற்காசியாவில் சிக்கன் கோர்மா பொதுவாக சாதத்துடன் உண்ணப்படுகிறது. 'டேஸ்டி யுகே' சமைக்கப்படாத அரிசியை எப்படி சமைத்த கோர்மாவில் சேர்த்தது என்று மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். "இது கோர்மாவில் செய்யப்பட்ட ஒரு நகைச்சுவை. நீங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள்."என்று அபிஜீத் முகர்ஜி என்ற பயனர் குறிப்பிட்டுள்ளார்.

"நன்கு அறியப்பட்ட கோர்மா தயாரிப்பாளராக, நான் இதை பீஒரு அவமானம்பீ என்று கூறுவேன். இந்த வீடியோவை அனைவரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும்,பூஎன்று அரிஹா பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

"இது கோர்மாவை விட தேவானி ஹண்டி ரெசிபி போல் தெரிகிறது. நீங்கள் எங்களை பல நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்தீர்கள். அதை சிக்கன் கோர்மா என்று அழைக்கிறீர்களா? தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்."என்று ராணா எழுதுகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

அதே நேரத்தில் டேனியல் சென் என்ற ஒரு பயனர் இதன் செய்முறையை’ஒரு வெளிநாட்டு சதி’ என்று குறிப்பிட்டுள்ளார். கோர்மாவுக்கு இது ஒரு அவமானம் என்றும், நம் அண்டைநாடு இதை பரப்ப அனுமதிக்காது என்றும் அரிஹா எழுதுகிறார்.

"இந்த கோர்மாவை என் அம்மாவிடம் காட்டினால், அவருக்கு மாரடைப்பு வந்துவிடும்," என்று ரக்கின் கான் எழுதினார்.

ஆசிப் ராஜா என்ற பயனர், "இது சிக்கன் கோர்மாவின் உண்மையான தரம் மற்றும் சுவைக்கு ஒரு களங்கம்,” என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

சிக்கன் கோர்மாவில் பல வகைகள் உள்ளன

துருக்கி, இரான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் கோர்மாவில் வறுத்த இறைச்சி மற்றும் காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் செய்முறையில், வெவ்வேறு பொருட்கள் அவற்றில் சேர்க்கப்படுகின்றன, மேலும் சமைக்கும் முறையும் சற்று வித்தியாசமானது.

முகலாய சமையல்காரர்கள் பாரசீக உணவு வகைகளால் ஈர்க்கப்பட்டு இறைச்சியை, வெங்காயம், தக்காளி மற்றும் தயிர் சேர்த்து சமைத்து மசாலா நிறைந்த உணவு வகைகளை தயாரித்தாக கூறப்படுகிறது. இது இன்றும் எல்லையின் இருபுறத்திலும் பிரபலமாக உள்ளது.

கறியில் ஈரப்பதம் முழுமையாக இருக்கும் விதமாக கோர்மா பாரம்பரியமாக எண்ணெய்க்கு பதிலாக நெய்யில் மெதுவாக சமைக்கப்படுகிறது.

மலேசியாவில் கோலை கோர்மா என்று அழைக்கப்படும் கோர்மாவில் உலர் பழங்கள் சேர்க்கப்பட்டு அது தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படுகிறது.

ஆனால் நீங்கள் அதன் பாரம்பரிய செய்முறையை மாற்ற நினைத்தால், விமர்சனத்திற்கும் தயாராக இருங்கள்!

காணொளிக் குறிப்பு, தீபாவளி பலகாரம்: செட்டிநாடு சீப்பு சீடை தெரியுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: