பாரிஸ் அளவு பகுதியை எரித்த பிரான்ஸ் காட்டுத் தீ
பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பெண் ஒரு உயிரிழந்துள்ளார். 3 பேர் மாயமாகியுள்ளனர்.
11 தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸின் தெற்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத் தீயால் எரிந்துள்ள 16,000 ஹெக்டேருக்கும் அதிகமான பகுதிகளை நீர் வீச்சு விமானம் (Water-bombing aircraft) மூலம் அணைத்து வருகின்றனர்.
தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்னும் சில நாட்கள் எரிந்துகொண்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட கடந்த 80 ஆண்டுகளில் பிரான்ஸில் பரவிய மிகப்பெரிய காட்டுத் தீயாகும்.
இது பாரிஸ் நகரை விட மிகப்பெரிய பரப்பளவை எரித்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி பரவத் தொடங்கிய தீ, காடுகள் மற்றும் கிராமங்களில் வேகமாகப் பரவியது.
இதனால், குறைந்தது 25 வீடுகள் எரிந்தன. மேலும் குடியிருப்பு வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பகுதிகள் புகைமூட்டமாக காணப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



