பயணிகள் படகு மீது விரைவுப் படகு மோதி விபத்து - எப்படி நிகழ்ந்தது?

காணொளிக் குறிப்பு, பயணிகள் படகு மீது விரைவுப் படகு மோதி விபத்து - எப்படி நிகழ்ந்தது?
பயணிகள் படகு மீது விரைவுப் படகு மோதி விபத்து - எப்படி நிகழ்ந்தது?

பயணிகள் படகு மீது விரைவுப் படகு ஒன்று மோதிய தருணம் இது.

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே நடந்த இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 18-ம் தேதி மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலிஃபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றுக்கொண்டு நீல்கமல் எனும் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது.

அப்போது, இந்திய கடற்படையின் விரைவுப் படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியது.

4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட பொதுமக்களில் 10 பேரும் கடற்படையைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

இன்னும் தேர்தல் பணி நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் ஃபட்னவிஸ் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான படகு மோதி விபத்து ஏற்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த நவம்பர் 22-ம் தேதி கடற்படைக்குச் சொந்தமான ஒரு நீர்மூழ்கிப் படகு கோவா அருகே மீன்பிடிப் படகு ஒன்றின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் மும்பை கேட் வே-யில் இருந்து புறப்படும் பயணிகள் படகுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர் காக்கும் கவசம் வழங்கப்படுகிறது.

அதே சமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)