பிரிட்டனில் மிகப்பெரிய டைனோசரின் 200 கால்தடங்கள் கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு,
பிரிட்டனில் மிகப்பெரிய டைனோசரின் 200 கால்தடங்கள் கண்டுபிடிப்பு

பிரிட்டனில் வாழ்ந்த மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ஒரு குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் சுமார் 200 பெரிய கால் தடங்கள், அங்கிருந்த சுண்ணாம்புக் கற்கள் மீது பதிந்துள்ளன.

நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் வகையான செட்டியோசரஸ் மற்றும் சிறிய இறைச்சி உண்ணும் டைனோசர் வகையான மெகலோசரஸ் போன்ற இரண்டு வெவ்வேறு வகையான டைனோசர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை இந்த கால்தடங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கால்தடங்களின் பாதைகள்150 மீ நீளம் கொண்டவை. ஆனால் இந்த குவாரியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் இன்னும் நீளமான கால்தடங்கள் கண்டுபிடிக்கப்படலாம்.

இந்த கால்தடங்களின் அளவின் அடிப்படையில், நான் பார்த்த மிகவும் சுவாரஸ்யமான தடயங்களில் இதுவும் ஒன்று," என்று பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் புதைப்படிவவியல் நிபுணர் பேராசிரியர் எட்கர் கூறினார்.

"இது போன்ற பெரிய உயிரினங்கள், பூமியில் எவ்வாறு வாழ்ந்தன என்பதை நீங்கள் சில காலம் பின்னோக்கி சென்று கற்பனை செய்து பாருங்கள்".

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)