'நிச்சயம் இந்தியாவுக்கு செல்வேன்' - உறுதியளித்த சுனிதா வில்லியம்ஸ்

காணொளிக் குறிப்பு,
'நிச்சயம் இந்தியாவுக்கு செல்வேன்' - உறுதியளித்த சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியிலிருந்து பூமி திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ், முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "நிச்சயம், எனது தந்தையின் சொந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறேன், அங்கேயுள்ள மக்களை சந்திப்பேன் என்றும் நம்புகிறேன். வரவுள்ள ஆக்ஸியம் திட்டத்தில் (மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான இஸ்ரோவின் கூட்டு முயற்சி) இந்தியர் பங்கேற்க உள்ளது குறித்து ஆர்வமாக இருக்கிறேன். அது மிகச் சிறப்பானது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு உள்ளூர் ஹீரோ கிடைப்பார்.

சர்வதேச விண்வெளி நிலையம் எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி அவரது அனுபவத்தில் இருந்து பேச முடியும். அது ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். எனது விண்வெளி அனுபவத்தை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு.

மேலும், இந்தியா நீண்ட காலமாக விண்வெளியில் கால் பதிக்க முயலும் அற்புதமான ஜனநாயக நாடு. அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு