காணொளி: காமனெயி மரணம் பற்றி இரானியர்கள் கூறுவது என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது நடத்திய தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டுள்ளார். காமனெயி மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என இரான் அறிவித்துள்ளது.
அதே நேரம் ஆயதுல்லா அலி காமனெயி மரணத்தை சிலர் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் திரண்ட புலம்பெயர் இரானியர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி காமனெயி மரணத்தை கொண்டாடினர். அதே போல அமெரிக்காவின் அட்லாண்டாவிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இரானிலும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக ஏ.பி.டி.என். காணொளி வெளியிட்டுள்ளது. ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக அமெரிக்கா, இஸ்ரேல் கூறியதுமே இரானின் காரஜ் பகுதியில் இரவில் கொண்டாட்டங்கள் நடந்ததாக அந்த செய்தி கூறுகிறது. அதே நேரம் காமனெயி மரணத்துக்கு துக்கம் அனுசரிக்கவும் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் கூட்டம் கூடியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



