நியூயார்க்: காற்றில் சுழன்று ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர், 6 பேர் பலி
நியூயார்க்: காற்றில் சுழன்று ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர், 6 பேர் பலி
நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
கடந்த வியாழக்கிழமை மதியம் நடந்த இந்த விபத்தை நேரில் கண்ட ஒருவர், ஹெலிகாப்டர் காற்றில் சுழன்று கொண்டே விழுந்ததைப் பார்த்ததாகக் கூறினார்.
ஸ்பெயினில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மற்றும் விமானி உள்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக நியூயார்க் நகர மேயர் உறுதிப்படுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



