டிரம்ப் இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுவதென்ன?

காணொளிக் குறிப்பு,
டிரம்ப் இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுவதென்ன?

அமெரிக்காவில் இருந்து ஆவணமற்ற 104 இந்திய குடியேறிகள், கைவிலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தச் செய்தி குறித்து அமெரிக்க ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று நடந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில், இந்தச் செயலை அவமானகரமானது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொள்ளும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மறுபுறம், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, அன்பான நண்பர் என்று மோதி அழைக்கிறார்," என நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

அதேநேரத்தில், "அமெரிக்காவில் இருந்து குடியேறிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பதன் மூலம், கொலம்பியா மற்றும் பிரேசிலை போல சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று இந்தியா நம்பியது. ஆனால் திரும்பி வந்த இந்திய குடியேறிகள், 40 மணிநேரம் கைவிலங்கு போடப்பட்டிருந்ததாகவும், கழிப்பறைக்குச் செல்லக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் கூறினர்" என்று நியூயார்க் டைம்ஸில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)