"காவல் நிலையம் சென்றேன், விரட்டி விட்டனர்" விசாரணையின் போது கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணம் - கள நிலவரம் என்ன?
"காவல் நிலையம் சென்றேன், விரட்டி விட்டனர்" விசாரணையின் போது கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் கூறியது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ளது மடப்புரம் ஊராட்சி. இங்குள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளன.

மிகவும் அமைதியாக காட்சியளிக்கும் மடப்புரத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. காரணம், காவல்துறை விசாரணையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் கொல்லப்பட்டது தான்.

கோவிலின் பின்புறத்தில் அஜித்குமாரை போலீஸார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை. இறந்துபோன காவலாளியின் தாயிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு விவகாரம் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில் தற்போது அங்குள்ள நிலவரம் என்னவென்று அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு நடத்தியது. அதில் தெரியவந்தது என்ன? தொடர்புடையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு