மும்பையில் பிறந்த அழகிய பென்குயின் குட்டிகள் - இந்தியாவுக்கு எப்படி வந்தன?
மும்பையில் பிறந்த அழகிய பென்குயின் குட்டிகள் - இந்தியாவுக்கு எப்படி வந்தன?
மும்பையில் வீரமாதா ஜீஜாபாய் போசாலே தாவரவியல் மற்றும் உயிரியல் பூங்காவில் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் உள்ள ஏழு பென்குயின் ஜோடிகளில் இரண்டு ஜோடிகள் மூன்று பென்குயின் குட்டிகளை ஈன்றுள்ளன.
இவற்றில், ஆலிவ் மற்றும் பாப்பாயி பென்குயின்கள் 'நாடி' என பெயரிடப்பட்டுள்ள ஆண் குட்டியை மார்ச் 4 ஆம் தேதி அன்று ஈன்றன.
டொனால்ட் மற்றும் டெய்ஸி ஜோடிக்கு டாம் மற்றும் பிங்கு என ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பென்குயின் குட்டிகள் பிறந்தன.
இதன்மூலம் இந்த பூங்காவில் உள்ள பென்குயின்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்த பென்குயின்கள் தென் கொரியா தலைநகர் சோலில் இருந்து மும்பைக்கு 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



