காணொளி: உலகின் 80% நிலநடுக்கம் இங்கு மட்டும் நிகழ்வது ஏன்?

காணொளிக் குறிப்பு, உலகின் 80% நிலநடுக்கம் இங்கு மட்டும் நிகழ்வது ஏன்?
காணொளி: உலகின் 80% நிலநடுக்கம் இங்கு மட்டும் நிகழ்வது ஏன்?

ரஷ்யாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகளாவிய நிலநடுக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக புவியியலாளர்கள் நம்புவது ஏன்?

ஜூலை 30 அன்று, ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கங்களை பதிவு செய்யும் முறை தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட 6வது மிகப்பெரிய நிலநடுக்கம் இது என கூறப்படுகிறது.

1960 ஆம் ஆண்டு சிலியில் 9.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அலாஸ்காவில் 9.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

2004 ஆம் ஆண்டில், இந்தோனீசியாவில் 9.1 அளவிலான பேரழிவு ஏற்பட்டது. அதனால் சுனாமி உருவாகி, இந்தியப் பெருங்கடலில் சுமார் 2.3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

பின்னர் 2011 இல், 8.9 அளவிலான நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது. இந்த முறை, அதனுடன் சேர்ந்த சுனாமி அணு விபத்தையும் ஏற்படுத்தியது.

இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா?

இந்தப் பெரிய நிலநடுக்கங்கள் அனைத்தும் ஒரே புவியியல் வளையத்தில் ஏற்பட்டவை.

அது "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" எனப்படும் பெரிய U வடிவ வளைவு.

உலகளவில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 80 சதவிகிதமும் எரிமலை வெடிப்புகளில் 65 சதவிகிதமும் இங்குதான் நிகழ்கின்றன. ஆனால் "ரிங் ஆஃப் ஃபயர்" என்றால் என்ன? இது மிகவும் விழிப்புடன் இருப்பது ஏன்?

பூமியின் வெளிப்புற அடுக்கு "டெக்டானிக் பிளேட்கள்" எனப்படும் பெரிய துண்டுகளால் ஆனது. இவை இடையறாது நகர்ந்து கொண்டிருக்கும். இவை சந்திக்கும் இடங்களில் தான் அதிக அளவு நில அதிர்வுகள் நிகழ்கின்றன.

"ரிங் ஆஃப் ஃபயர்" முழுவதும் பல்வேறு டெக்டானிக் பிளேட்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.

ஒரு கனமான கடல் தட்டு, இலகுவான கண்ட தகடுடன் மோதும்போது, அது கீழே தள்ளப்படுகிறது. கீழே செல்வதற்காக அது சூடாகி உருகுகிறது. அதன் மூலம் சூடான மக்மா மேலே பீறிட்டு வரும். இதுவே எரிமலைகளை உருவாக்குகிறது.

பிளேட்கள் ஒன்றின் மீது ஒன்று நகரும்போது சிக்கிக் கொள்ளும். இது பல நூற்றாண்டுகளாக கடுமையான அழுத்தத்தை உருவாக்குகின்றன . அந்த அழுத்தம் திடீரென வெளிவந்தால், அது "மேகா த்ரஸ்ட் நிலநடுக்கத்தை" ஏற்படுத்தும்.

அதே தான் கம்சாட்காவில் நடந்தது. பசிபிக் தட்டு சிறிய ஓகோட்ஸ்க் தகட்டை கீழே இழுத்துக்கொண்டிருந்தது, அது உடைந்தபோது, ​​அது ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிட்டது.

வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை மெகாத்ரஸ்ட் நிலநடுக்கங்களே. டெக்டானிக் பிளேட்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருப்பதால், எதிர்காலத்திலும் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் மேலும் பல நில அதிர்வுகளை எதிர்பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு