காணொளி: உரிமையாளர் வீட்டில் இருக்கும்போதே கார்களை உடைக்காமல் நூதன முறையில் திருடும் கும்பல்

காணொளிக் குறிப்பு, கார்களை உடைக்காமல் நூதன முறையில் திருடும் கும்பல்
காணொளி: உரிமையாளர் வீட்டில் இருக்கும்போதே கார்களை உடைக்காமல் நூதன முறையில் திருடும் கும்பல்

பிரிட்டனில் உரிமையாளர் வீட்டில் இருக்கும் போதே, சத்தமில்லாமல், கார்களை உடைக்காமல் நூதன முறையில் கார்களை திருடி வருகிறது ஒரு கும்பல்.

ஒரு மின்னணு கருவியை பயன்படுத்தி வீட்டுக்கு வெளியே நிற்கும் காரை அந்த கும்பல் திருடுகிறது.

வீட்டுக்குள் இருக்கும் கார்களின் எலெக்ட்ரானிக் சாவிகளில் உள்ள சிக்னல்களை இந்த கருவியை பயன்படுத்தி பெற்று, கார்கள் திருடப்படுகின்றன.

இந்த சாதனங்கள் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு