காணொளி: வரி உயர்வுக்கு நடனமாடி எதிர்ப்பு தெரிவித்த நபர்
காணொளி: வரி உயர்வுக்கு நடனமாடி எதிர்ப்பு தெரிவித்த நபர்
நியூ ஜெர்சியை சேர்ந்த வில் தில்லி என்ற நபர், வரி உயர்வை எதிர்த்து நகர சபை கூட்டத்தில் பிரேக் டான்ஸ் ஆடிய காணொளி வைரலாகி உள்ளது.
நியூயார்க் நகரத்திற்கு அருகிலுள்ள கிரான்ஃபோர்ட் நகரில் வசிக்கும் தில்லி, செப்டம்பர் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மேடையில் வந்து ரோபோ நடனம் மற்றும் பிரேக் டான்ஸ் ஆடினார்.
"சராசரியாக வீடுகளுக்கு சுமார் \$400 வரி உயர்வு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் என் வீட்டுக்கு \$900 உயர்ந்துவிட்டது," என்று அவர் மேடையில் கூறினார். பின்னர் அவர் மூன்வாக் செய்தவாறே அங்கிருந்து வெளியே சென்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



