விண்வெளியில் மாதக்கணக்கில் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

காணொளிக் குறிப்பு,
விண்வெளியில் மாதக்கணக்கில் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.

அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அன்று விண்வெளிக்கு சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர்கள் இல்லாமல், இந்த விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் அவர்கள் விண்வெளியில் தங்கியிருப்பது எதிர்பார்த்ததை விட நீண்டது .

விண்வெளியில் வாழ்வது மிகவும் சவாளானது. மாதக்கணக்கில் விண்வெளியில் இருப்பதால் விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.