பரஸ்பர வரி அறிவிப்பில் சீனா, ஜப்பான், தைவானுக்கான வரி குறித்து விளக்கிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, சீனாவுக்கு 34% வரி - ஜப்பான், பிரிட்டனின் நிலை என்ன?
பரஸ்பர வரி அறிவிப்பில் சீனா, ஜப்பான், தைவானுக்கான வரி குறித்து விளக்கிய டிரம்ப்

சீனா 67% அமெரிக்காவுக்கு வரி விதிக்கிறது. இதில் அமெரிக்க நாணயத்தின் மதிப்பைக் குறைப்பது மற்றும் வர்த்தக தடைகளும் அடங்கும். நாம் அவர்களுக்கு 34% தள்ளுபடி செய்யப்பட்ட பரஸ்பர வரியை விதிக்கிறோம்.

ஐரோப்பிய ஒன்றியம் மிக மிக மோசமான வர்த்தகர்கள். 39% வரி விதிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு 20% விதிக்கிறோம்.

தைவான் கணினி சிப் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. முன்பு நாம் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தினோம். அவர்கள் 64% வரி விதிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு 32% வரி விதிக்க இருக்கிறோம்.

ஜப்பான் 46% வரி விதிக்கிறார்கள். குறிப்பாக கார்கள் போன்ற பொருட்களுக்குக் கூடுதலாக வரி விதிக்கிறார்கள். நாம் அவர்களுக்கு 24% வரி விதிக்கிறோம்.

பிரிட்டன் 10% வரி விதிக்கிறார்கள். நாமும் 10% வரி விதிக்கிறோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.