குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை – பொங்கும் ரசிகர்கள்

மணிமேகலை

பட மூலாதாரம், MANIMEGALAI/TWITTER

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக பங்கெடுத்து வந்த தொலைக்காட்சி பிரபலமான மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியையும் கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே முந்தைய சீசன்களோடு ஒப்பிடுகையில் ஆர்வம் சற்று குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு, முந்தைய சீசன்களை போல இந்த முறை பங்கேற்ற போட்டியாளர்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதே காரணம் எனக் கூறப்படுகிறது.

முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேறினார். இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் வெளியேறப் போகும் போட்டியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று நடுவர்கள் கூறினர்.

இதற்கிடையே குக் வித் கோமாளி ரசிகர்களுக்குப் புதிய அதிர்ச்சி ஒன்றை அதில் பங்கெடுத்து வரும் மணிமேகலை அளித்தார்.

கடந்த 3 சீசன்களிலும் சரி இம்முறையும் சரி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வந்த அவர், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அவரது சமூக ஊடக பதிவில், “இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடில் இருந்து என்னுடைய அனைத்து பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்துள்ளீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பதிவில், “எனக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளில் என்னுடைய முழு சிறப்பையும் வெளிப்படுத்த கூடுதல் முயற்சிகளை எப்போதும் நான் எடுப்பேன். உங்கள் அனைவரையும் குக் வித் கோமாளி மூலமாக மகிழ வைத்துள்ளதாக நம்புகிறேன். இந்த அன்பை எப்போதும் எதிர்பார்க்கிறேன்,” என்று தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

மணிமேகலையின் இந்தப் பதிவுக்கு அவருடைய ரசிகர்கள் “உங்களை மிகவும் மிஸ் செய்வோம்” என்று கூறி தங்கள் அன்பை வெளிப்படுத்தியதோடு வெளியேறுவதற்கான காரணத்தையும் கேட்டு வருகின்றனர்.

அதில் சிலர், இந்த நிகழ்ச்சியையே அவருக்காகத்தான் பார்ப்பதாகவும் இதுவே அவருடைய கடைசி எபிசோட் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு பயனர், இந்த சீசன் ஏற்கெனவே போர் அடிப்பதாகவும் மணிமேகலை சென்றுவிட்டால் இன்னும் மோசமாகிவிடும் எனவும் குறிப்பிட்டதோடு, குக் வித் கோமாளி மணிமேகலை இல்லாமல் பழையபடி இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பயனர், “இத்தகைய விஷயங்கள், இந்த சீசனை பார்க்க வேண்டாம் என்று நான் எடுத்த முடிவு சரி என்பதைக் காட்டுகின்றன. உங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு ஆல் தி பெஸ்ட் மணிமேகலை அக்கா” என்று தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

“வாரிசுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகிறது. ஷிவாங்கிக்கு அதிக பில்டப் கொடுக்கப்படுகிறது. அவரை நடுவர்கள் அளவுக்கு அதிகமாகப் புகழ்கிறார்கள்,” என்று மணிமேகலையின் ட்வீட்டை ரீட்வீட் செய்து குறிப்பிட்டுள்ள ஒரு பயனர், அவருடைய எதிர்காலத்திற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் மணிமேகலை. ஆண் கெட்டப் போடுவது அவருக்கு நன்றாக செட் ஆனதால், இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஆண் கெட்டப்பில் தான் மணிமேகலை காட்சியளித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

குறிப்பாகத் தனது கடைசி எபிசோடில் நானே வருவேன் படத்தில் வரும் தனுஷின் கதிர் கெட்டப்பில் வந்திருந்தார். அவருடைய இந்த லுக் ரசிகர்களைக் கவரவே அந்த கெட்டப்பை சமூக ஊடகங்களில் டிரெண்டாக்கினார்கள். நானே வருவேன் கெட்டப்பில் வந்து “நான் வரமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு நபர், “இன்னும் அதிகமான அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவர் அவர். ஷிவாங்கி, புகழ் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சம் இவரை மறைத்துவிட்டது. அவருக்கு மாற்றாக ஒருவரைக் கொண்டு வருவது மிக மிக மிகக் கடினம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை

பட மூலாதாரம், MANIMEGALAI/TWITTER

மணிமேகலை, 2017ஆம் ஆண்டு ஹுசைன் சாதிக் என்ற நடனக் கலைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுடைய திருமணம் நடந்த நேரத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த அதேநேரத்தில், அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிடுவார் என்ற கருத்துகளும் பேசுபொருளாகின.

அதற்கு, தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதில்லை எனவும் தனது கணவரோ அவரது குடும்பத்தினரோ மணிமேகலையை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தவில்லை எனவும் கூறி மணிமேகலை அந்தச் சலசலப்பைத் தெளிவுபடுத்தினார்.

ஹுசைன் மெர்சல் திரைப்படத்தில் வரும் மெர்சல் அரசன், மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் வரும் ஆடலுடன் பாடலைக் கேட்டு போன்ற பாடல்களில் தோன்றியுள்ளார்.

அவருடன் அறிமுகமானது குறித்து 2017ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய மணிமேகலை, “அவருடைய நடனம் மிக நன்றாக இருந்தது. அவருடைய எண்ணைப் பெற்று வாழ்த்து கூறினேன். அப்போது நட்பாகி சில நாட்கள் கழிந்தன. காலப்போக்கில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு அவருடைய பிறந்த நாளுக்காக ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த ஹைதராபாத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றேன்,” என்று கூறினார்.

மணிமேகலை, ஹுசைன் சாதிக்கின் திருமணத்திற்கு, மணிமேகலை வீட்டில் மறுப்பு தெரிவித்த காரணத்தால் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

அதுகுறித்துப் பேசியவர், “சிறு வயதில் இருந்து என் விருப்பத்தின்படி பயணித்தவள் நான். என் பெற்றோர் நான் கேட்ட அனைத்தையும் கொடுத்து, என் அனைத்து முயற்சிகளிலும் உறுதுணையாக நின்றார்கள். ஆனால், என் தந்தை நான் ஹுசைனை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அதுகுறித்த பிரச்னை தீவிரமாகவே, நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்,” என்று தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து விஜய் டிவியில் தன் கணவர் ஹுசைனுடன் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரையில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை, 12 ஆண்டுகளாகத் திரையில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். அவர் சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

மணிமேகலை

பட மூலாதாரம், MANIMEGALAI/TWITTER

குக் வித் கோமாளியில் மணிமேகலை

விஜய் டிவியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2019இல் குக் வித் கோமாளி என்ற காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சமையலோடு நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்டதால், இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப் பலரும் ஸ்டிரெஸ் பஸ்டராக கருதவே, அதன் டிஆர்பி ஒரு கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சியதாகவும் பேச்சுகள் எழுந்ததுண்டு. சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள் ‘குக்’ ஆகக் கலந்துகொள்ள, நகைச்சுவை தெரிந்த சிலர் கோமாளிகளாகக் கலந்துகொண்டனர்.

முதல் சீசனில் அப்படி கோமாளிகளாக கலந்துகொண்டவர்களில் மணிமேகலையும் ஒருவர். அப்போதிருந்து தொடர்ந்து நான்காவது சீசன் வரை கோமாளியாகப் பங்கெடுத்து வந்த மணிமேகலை, 4வது சீசனில் நான்கு வாரங்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில்தான் தற்போது வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோக்களில் மற்றவற்றோடு ஒப்பிடுகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே அதிகளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் கோமாளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு எனக் கூறலாம்.

குக் வித் கோமாளி

பட மூலாதாரம், VIJAY TELEVISION

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெளியானபோது பெரியளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், கோவிட் ஊரடங்கு தொடங்கிய பிறகு வீட்டிற்குள்ளேயே இருந்த மக்கள் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கவே, இதன் வடிவம் பலரையும் கவரத் தொடங்கியது.

அது மக்களை எந்த அளவுக்குக் கவர்ந்தது என்றால், சீசன் 2 ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கையே குக் வித் கோமாளி சீசன் 2 முந்தியதாகச் சொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்குகளின்போது கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளும் நகைச்சுவைகளும் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.

இரண்டாவது சீசன், புகழ், பாலா ஆகியோரால் ஹிட் ஆனது. அவர்கள் சாதாரணமாகச் செய்யும் நகைச்சுவைகள் பிரபலமான காமெடி வசனங்களாக மாறின. இந்த நிகழ்ச்சி வெற்றியடைய அதுவொரு பெரிய காரணம். மணிமேகலை இரண்டாவது சீசனில் அவ்வப்போதுதான் வந்தார். ஆனால், மூன்றாவது சீசனில் அனைத்து எபிசோட்களிலும் வந்து டைமிங் நகைச்சுவைகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மணிமேகலையின் டாக்டர் பட கிங்ஸ்லி கெட்டப், சோட்டா பீம் கெட்டப் ஆகியவை ரசிகர்களிடையே இன்னமும் மிகவும் பிரபலம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: