லால் சலாம் விமர்சனம்: கிரிக்கெட் மூலம் இந்து - முஸ்லிம் பிரச்னையை பேசி வெற்றி பெற்றதா?

காணொளிக் குறிப்பு, லால் சலாம் விமர்சனம்: கிரிக்கெட் மூலம் இந்து - முஸ்லிம் பிரச்னையை பேசி வெற்றி பெற்றதா?
லால் சலாம் விமர்சனம்: கிரிக்கெட் மூலம் இந்து - முஸ்லிம் பிரச்னையை பேசி வெற்றி பெற்றதா?

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று (வெள்ளி, பிப்ரவரி 9) வெளியானது.

ஐஸ்வர்யா ‘3’, வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கான ஊடக விமர்சனங்கள் தற்போது வரத் துவங்கியிருக்கின்றன. லால் சலாம் படத்தின் கதை என்ன?

ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்து மற்றும் இஸ்லாமிய சமூக மக்களிடையே இருக்கும் வேறுபாடுகள் எப்படி கிரிக்கெட் விளையாட்டில் பிரதிபலிக்கிறது என்பதையே இப்படம் பேசுகிறது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் தெரிவிக்கின்றன.

மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்தின் மகன் ஷம்சுதீனாக வருகிறார் விக்ராந்த். விக்ராந்துக்கும், திரு என்ற கதாபாத்திரத்தில் வரும் விஷ்ணு விஷாலுக்கும் சிறு வயது முதலே போட்டி மனப்பான்மை நிலவுகிறது.

இருவரும் மொய்தீன் துவங்கிய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்றனர். அணியும் பல வெற்றிகளைக் குவிக்கிறது. ஆனால் விஷ்ணு விஷாலின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் சிலர், அவரை அணியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர் தனியே ஒரு கிரிக்கெட் அணியைத் துவங்குகிறார்.

இரண்டு அணிகளும் இந்து-இஸ்லாம் என இரண்டு சமூகங்களின் அணிகளாக மாறிப் போகின்றன. இது அந்தக் கிராமத்தின் அமைதியைக் குலைக்கிறது. ஒரு போட்டி, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. என்ன நடந்தது, ரஜினிகாந்த் இந்தப் பிரச்னைகளைச் சமாளித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)