“என் அம்மாவை ஹமாஸ் கொன்றுவிட்டார்கள்...” - கண்ணீரில் இஸ்ரேல் பெண்

காணொளிக் குறிப்பு, “என் அம்மாவை ஹமாஸ் கொன்றுவிட்டார்கள்.. அழுவதற்கு கூட நேரம் இல்லை ” -
“என் அம்மாவை ஹமாஸ் கொன்றுவிட்டார்கள்...” - கண்ணீரில் இஸ்ரேல் பெண்

காசாவிற்கு அடுத்துள்ள ‘நிர் ஓஸ் பகுதியில் வசிக்கும் ஹடாஸ், விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொண்டிருந்தார்.

பாதுகாப்பான இடத்திலிருந்தபடி, அங்கு நடப்பவற்றைத் தனது குடும்பத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

ராக்கெட் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததும் அவர் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரபி மொழியில் சத்தம் போடுவது கேட்பதாகச் சொல்லியிருந்தார்.

அந்தத் தாக்குதலின்போது, தனது மறைவிடத்தில் ஒளிந்துகொண்டு ஹடாஸ் உயிர் தப்பினார். ஆனால், அன்றிரவு அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதை அறிந்தார். அவரது இரண்டு குழந்தைகள், அவரது முன்னாள் கணவர், அவரது சகோதரியின் மகள், மற்றும் அவரது 80 வயது தாயார்.

தற்போது அவரது தாயார் மற்றும் சகோதரியின் மகள் இருவரும் ஹமாஸ் தாக்குதலில் இறந்துவிட்டனர். பிணயக் கைதியாக இருக்கும் தனது குடும்பத்தின் பிற உறுப்பினர்களை மீட்க வேண்டும் என்று அவர் போராடி வருகிறார்.

இஸ்ரேல் ஹமாஸ்