கல்விக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

காணொளிக் குறிப்பு, சக்கரநாற்காலியில் பயணம் செய்து 30000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் சமர்பித்துள்ளார்.
கல்விக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஆசிம் வெளிமன்னா. இவர் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் 3 ஆம் வகுப்பில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அதுவரை 4 சுவர் மட்டுமே தனக்கு தெரியும் என்றும், கல்வி கற்க தொடங்கிய பிறகு தனக்கு தன்னம்பிக்கை வளரத்தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவன்

அவரும் மற்றவர்களை போல பல இடங்களுக்கும் செல்ல வேண்டும் என நினைக்கத் தொடங்கியதாகவும், தங்கள் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தனது சக்கர நாற்காலியில் 52 நாட்கள் 450 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து 30000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் சமர்பித்துள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தயாரிப்பு - ஹேமா ராகேஷ்

ஒளிப்பதிவு / படத்தொகுப்பு - நிஷாந்த் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)