மிதமிஞ்சிய மொபைல் ஆசையால் பெற்றோரையே கொலை செய்ய திட்டமிட்ட 13 வயது சிறுமி

    • எழுதியவர், லக்ஷ்மி பட்டேல்
    • பதவி, பிபிசி குஜராத்திக்காக

"எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது குளியலறையில் எண்ணெயை கொட்டுகிறாள், யூடியூப்பில் கொலை வீடியோக்களை எப்போதும் பார்க்கிறாள். "

குஜராத்தின் ஆமதாபத்தைச் சேர்ந்த 56 வயது தந்தை தனது மகள் குறித்து கூறிய வார்த்தைகள் இவை. குஜராத் அரசால் செயல்படுத்தப்படு 'அபயம்' என்ற 181 ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு உதவி கோரினார் அவர்.

தன் கதையைச் சொல்லும்போது, தன் மகளை மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படி அவர் கொஞ்சினார். இதையடுத்து, 181 ஹெல்ப்லைன் உதவியுடன் 13 வயது சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

7-ஜூன்-2023 அன்று, 181 ஹெல்ப்லைனுக்கு ஒரு தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் அவர், "எனது வீட்டின் நிலை சரியில்லை. என் மகளின் மனநிலை சரியில்லை. நீங்கள் வந்து அவளுக்கு அறிவுரை சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

இந்த அழைப்பு வந்தவுடன், 181 ஹெல்ப்லைனின் ஆலோசகர்கள் தங்களை தொடர்புகொண்ட நபர் கூறிய இடத்தை அடைகிறார்கள். முதலில் சிறுமியின் பெற்றோரிடம் அவர்கள் பேசினார். அவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆனது தெரியவந்தது.

கணவருக்கு 56 வயதாகிறது. மனைவியின் வயதோ 46. திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தே மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்கு வயது 13. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்திருக்கிறான்.

கொலை செய்துவிடுவதாக மிரட்டினாள்

ஆலோசகரிடம் தனது மனதில் உள்ள வேதனையை எல்லாம் சிறுமியின் தந்தை கொட்டித்தீர்த்தார்.

இது குறித்து 181 ஹெல்ப்லைன் ஆலோசகர் ஃபால்குனி படேல் பிபிசியிடம் பேசினார். மேற்கூறிய தந்தை விவரித்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தந்தை அவரிடம், "எங்கள் முதல் குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. 13 வயதே ஆன மகள் தினமும் எங்களை அவமானப்படுத்துகிறாள். எங்கள் சொல்பேச்சு கேட்பதில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து, மதியம் 12 மணிக்கு எழுந்திருப்பாள். நாள் முழுவதும் டிவி பார்க்கிறார், சொல்லாமல் வெளியே செல்கிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு இந்த வீட்டில் யாரும் வேண்டாம் என்கிறாள். நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்கிறாள்."

ஆலோசகரிடம் தனது மனதில் உள்ள வேதனையை எல்லாம் சிறுமியின் தந்தை கொட்டித்தீர்த்தார்.

இது குறித்து 181 ஹெல்ப்லைன் ஆலோசகர் ஃபால்குனி படேல் பிபிசியிடம் பேசினார். மேற்கூறிய தந்தை விவரித்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தந்தை அவரிடம், "எங்கள் முதல் குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இல்லை. 13 வயதே ஆன மகள் தினமும் எங்களை அவமானப்படுத்துகிறாள். எங்கள் சொல்பேச்சு கேட்பதில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து, மதியம் 12 மணிக்கு எழுந்திருப்பாள். நாள் முழுவதும் டிவி பார்க்கிறார், சொல்லாமல் வெளியே செல்கிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனக்கு இந்த வீட்டில் யாரும் வேண்டாம் என்கிறாள். நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்கிறாள்."

"கடந்த 4 மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. தற்போது 7ம் வகுப்பு படித்து வருகிறாள். அதிலும் தோல்வியடைந்துள்ளாள். சிறுவயதிலேயே கெட்ட சகவாசத்தில் மாட்டிக்கொண்டாள். கொரோனா நேரத்தில் லாக்டவுன் போடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்காக அவளுக்கு மொபைல் வாங்கிக்கொடுத்தோம்” என்றார்.

தனது மகளின் நிலை குறித்து மேலும் பேசிய அவர், “தற்போது உலகமே சமூக ஊடகத்தில் மூழ்கியுள்ள நிலையில், எனது மகளும் கெட்ட சகவாசத்தில் சிக்கிகொண்டுள்ளார். அவள் சமூக ஊடகங்கள் மூலம் வெவ்வேறு சிறுவர்களுடன் பேசுகிறார். பசங்களை ரகசியமாக சந்திக்க செல்கிறாள். எங்களிடம் இருந்து நிறையவற்றை மறைக்கிறாள். கற்றுக்கொள்ள கூடாத விஷயங்களை எல்லாம் கற்று இருக்கிறாள்."

"இதுபற்றி அறிந்ததும் எனது மனைவி மகளிடம் இருந்து ஸ்மார்ட்போனை பறித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக அவளிடம் ஸ்போர்ட் போன் இல்லை. நாங்கள் மொபைலை பறித்தப் பின்னர் எங்களை அவள் கொடுமைப்படுத்த தொடங்கினாள். எங்களைக் கொல்லவும் திட்டம் தீட்டினாள் நாங்கள் அவளுடைய தொலைபேசியை எடுத்துச் சென்ற பிறகு, அவள் எங்களை வீட்டில் வெளிப்படையாகக் கொடுமைப்படுத்தத் தொடங்கினாள், எங்களைக் கொல்லத் திட்டம் தீட்டினாள்” என வேதனையுடன் கூறினார்.

சமூக ஊடகத்தில் மூழ்கினாள்

ஜூன் 7-2023 என்ற தேதியைக் குறிப்பிட்டு ஆலோசகரிடம் பேசிய சிறுமியின் தந்தை, "அவள் சமையலறையில் உள்ள பெட்டியில் சர்க்கரையுடன் மருந்து கலந்தாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது, ​​குளியலறையில் திரவத்தைக் கொட்டுகிறார். எப்போதும் யூடியூப்பில் கொலை வீடியோக்களை பார்க்கிறாள். 100 ரூபாய், 500 ரூபாய் கட்டுகளை எங்கிருந்து கொண்டு வருகிறாள் என்றே தெரியவில்லை.

விட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று நாங்கள் கண்டித்தால், வீட்டில் உள்ள அனைத்தையும் உடைத்து நொறுக்குகிறாள். 7 வயதே ஆன தனது தம்பியையும் அவள் அடிக்கிறாள். உறவினர்களுக்கு அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் பயந்து இது குறித்து வெளியே சொல்லவில்லை. வெளியே சென்றால் 5 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறாள். இந்த வீட்டை என் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு நீங்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள். நான் வீட்டை விற்றுவிட்டு வெளிநாடு சென்றுவிடுகிறேன் என்று கூறுகிறாள்” என தெரிவித்த அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கினார்.

"எப்படியாவது என் மகளுக்கு அறிவுரை கூறுங்கள், அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்கள்" என்று சிறுமியின் தாய் 181 குழுவிடம் கூறினார்.

சிறுமிக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கிய குழுவினர் அவள் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பையனுடன் காதலில் இருப்பதையும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அவனுடன் பழக்கம் ஏற்பட்டதையும் கண்டுபிடித்தனர்.

சிறுமியிடன் 13, 14 இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளன. காதல், காமம் போன்றவை குறித்து அவள் அறிந்துவைத்திருந்தாள்.

இது தொடர்பாக அவளிடம் விசாரித்தபோது, "என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நான் சிறுவனிடம் பேசினேன். என் சகோதரியின் வீட்டுக்கு செல்வதாக கூறி அவனை பார்க்க போவேன். இதையெல்லாம் நான் செய்திருக்கக் கூடாது என்று எனக்கு தோன்றவில்லை" என்று அவர்களிடம் கூறியிருக்கிறாள்.

"மொபைல் கிடைத்ததில் இருந்து எனக்கு எல்லாமே தெரிய ஆரம்பித்தது. அண்டைவீட்டாரிடம் இருந்தும் பள்ளியில் இருந்தும் சமூக வலைதளங்கள் குறித்து அறிந்துகொண்டேன். அதன் அடிப்படையில்தான் பையனுடனான காதலை முன்னெடுத்துச் சென்றேன்."

சிறுமிக்கு கவுன்சிலிங்க் வழங்கும்போது அவள் தனது சசோதரி குறித்தே பேசினாள். அதையடுத்து அவரை அழைத்து குழுவினர் பேசினார். அதில், அந்த பெண்ணும் அந்த பையனும் காதலில் இருந்துள்ளனர் என்பதும் அவர்கள் பிரேக் அப் செய்துகொண்ட பின் அந்த பையன் சிறுமியை தொடர்புகொண்டு பேசத் தொடங்கினான் என்பதும் தெரியவந்தது.

சிறுமிகள் இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இருவருமே தங்களின் அண்டைவீட்டில் உள்ள 19 வயது நபருடன் தொடர்பு வைத்திருந்தனர். இதையடுத்து அந்த நபரை அழைத்து 181 குழுவினர் பேசினர். அப்போது, இரண்டு சிறுமிகளுடனும் அவர் தொடர்பில் இருந்ததையும் சிறுமிகள் தவறாக தூண்டப்பட்டதையும் குழுவினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் மூன்று பேரையும் ஒன்றாக வைத்து 181 குழுவினர் ஆலோசனை வழங்கினர். தங்கள் தவறை உணர்ந்த அவர்கள், பெற்றோரிடம் மன்னிப்பும் கோரினர்.

" இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சிறுமி தனது பெற்றோரிடம் மன்னிப்புக்கேட்டான். அவளிடன் செல்போன் திரும்ப வழங்கப்பட்டது. பெற்றோர்களும் சிறுமியிடம் மன்னிப்பு கேட்டேன். இனி படிப்பில் முழு கவனம் செலுத்துவதாக சிறுமி உறுதியளித்தாள்"

சமூக ஊடகங்கள் மற்றும் மொபைலுக்கு அடிமையாதல்

இதேபோன்றொரு சம்பவம் கடந்த ஜூன் 9ஆம் தேதி ஆமதாபாத்தில் நிகழ்ந்தது. 20 வயது மகளின் பெற்றோர் 181 குழுவை அழைத்து உதவிகோரினர். அவள் படிப்பில் கவனம் செலுத்த உதவ வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து 181 குழுவினர் பிபிசியிடம் கூறுகையில், "மயூரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 20, பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவள் மொபைலுக்கு அடிமையாகி இருந்தாள். நாள் முழுவதும் மொபைலையோ லேப்டாப்பையோ விட்டு வைப்பதில்லை. கல்லூரிக்கு படிக்க செல்வதில்லை. கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாள்"

சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கி பலருடனும் பேசிவந்திருக்கிறாள். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட கோபப்படுகிறாள். யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. கடந்த ஆறு மாதங்களாக யாருடனோ தொடர்பு இருந்துள்ளது. மொபைலில் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார். காதலனுடன் அடிக்கடி வெளியே சென்ற அவர் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. ஆபாச வீடியோக்களிலேயெ பொழுதை கழித்துள்ளார்.

தனது மகள் மொபைலை தவறாக பயன்படுத்துவதை அறிந்த அவரின் தாய் மொபலை பறித்துள்ளார். அதையடுத்து சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மயூரி கோபப்பட்டாள். இது குறித்து பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து அவர் அபயம் குழுவின் உதவியை நாடியுள்ளார்.

இது தொடர்பாக 181 குழுவினர் பேசும்போது, “சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தாமல் கல்வியில் கல்வி செலுத்தி நல்ல வாழ்க்கையை வாழ்வது தொடர்பாக மயூரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அவருக்கு போதிக்கப்பட்டது. இதேபோது, மகளுக்கு ஒத்துழைக்குமாறும் அவருக்கு மன அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று பெற்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டது."

மொபைலுக்கு அடிமையானால் என்ன செய்ய வேண்டும்?

ஆமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப்படும் SVP மருத்துவமனையின் மனநலப் பிரிவுத் தலைவர் டாக்டர். நிமேஷ் பரிக் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், " குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவது தொடர்பாக தினமும் ஒருவராவது எங்களிடம் வருகின்றனர்.

மொபைலுக்கு அடிமையாவதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் பெற்றோர் இருவரும் வேலை காரணமாக குழந்தைகளை கவனக்க முடியாமல் போகிறது. சில சமயங்களில் குழந்தைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சில சமயங்களில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள நட்பு வட்டத்தால் மொபைலுக்கு அடிமையாகிறார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர், “ குழந்தைகள் மொபைல் போனை வாங்கி கொடுத்தால், அவர்கள் தினமும் எவ்வளவு நேரம் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவதை ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகள் எதைத் தேடுகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இது தவிர, உள்ளரங்க விளையாட்டு மற்றும் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் கல்விக்கு மொபைல் உதவுகிறது. அதையும் நாம் பார்க்க வேண்டும், எனவே நேரக்கெடுவதை ஏற்படுத்துவது சிறந்ததாக இருக்கும்" என்றார்.

மொபைலுக்கு அடிமையாக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.

"குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாக உள்ளனர் என்று வழக்குகளில் 60 முதல் 70 சதவீதம் வரை அவர்கள் விளையாட்டுகளில் தீவிர ஆர்வத்துடன் உள்ளனர். அதே நேரத்தில் 30 சதவிகிதம் பேர் இணைத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பதின்ம வயதுடையவர்கள் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பதாக 10 சதவீத வழக்குகள் வருகின்றன.

நீங்கள் அவர்களிடம் இருந்து மொபைலை பிடுங்கினால் கோபப்படத் தொடங்கிவிடுகின்றனர். 80 முதல் 85 சதவீதம் வரை ஆலோசனை மூலமே அவர்களை குணப்படுத்தி விடலாம். 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். மன அழுத்த எதிர்ப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.

பின்னர் 'Withdrawal Symptoms' எனப்படும் பின்வாங்கும் அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படும்.குழந்தைகளுக்கு கோபம் வரும்.சில நேரங்களில் கோபம் அதிகமாகி நாசப்படுத்துகிறது.80 முதல் 85 சதவீத வழக்குகளில் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர ஆலோசனை வழங்கலாம்.அதே சமயம் 10 முதல் 15 சதவீதம் வரை மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். மன அழுத்த எதிர்ப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: