திமுக மகளிர் உரிமை மாநாட்டில் தேர்தல் நோக்கம் உண்டு - மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
திமுக நடத்திய மகளிர் மாநாடு தேர்தல் நேரத்தில் கை கொடுக்கும் என்ற நோக்கமும் கொண்டது தான் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகிறார்.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கான அடுத்த கட்ட நகர்வாக இந்த மாநாடு இருக்கலாம் என்கிறார் ப்ரியன். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள்,வாரிசு அரசியல் சார்ந்தவர்கள் என பாஜக கூறுகிறது. எத்தனை காலத்துக்கு இதே விமர்சனத்தை வைக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார். கட்சித் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே தலைவர்களாகி்யுள்ளனர் என்றார்.
இந்த மாநாட்டின் மூலம் கனிமொழிக்கு அகில இந்திய அளவில் பார்வை கிடைக்கும் என்றும் கட்சியும் அதை ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



