You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
FACT CHECK: தவறாக சித்தரிக்கப்படும் சந்திரயான் பற்றிய பிபிசியின் 4 ஆண்டுகள் பழைய வீடியோ
பிபிசி வேர்ல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட பழைய காணொளி ஒன்று கத்தரிக்கப்பட்டு புதிய காணொளி போல தவறாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் புதன்கிழமை மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி வரலாறு படைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ'வின் இந்த முக்கியமான பணியை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உலகெங்கிலும் உள்ள ஊடகங்களும் அதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தன.
இதில் பிபிசியின் இந்திய மொழிகள் சேவை மற்றும் பிபிசியின் சர்வதேச சேவைகளும் அடங்கும்.
விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய சமூக ஊடகங்களில், குறிப்பாக X சமூக ஊடகத்தில், 2019ஆம் ஆண்டில் பிபிசியால் ஒளிபரப்பப்பட்ட சிதைந்த வீடியோவை பலரும் பகிரத் தொடங்கினர்.
தவறாகப் பகிரப்பட்ட இந்த காணொளித் துண்டு, உண்மையில் பிபிசி வேர்ல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளருக்கும் பிபிசியின் இந்திய செய்தியாளருக்கும் இடையிலான விவாதமாகும். இது 2019இல் சந்திரயான்-2 ஏவப்படுவதற்கு சற்று முன்பு நடந்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் திரிக்கப்பட்ட காணொளிக்கும் சந்திரயான்-3க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திரிக்கப்பட்ட காணொளியில் செய்தியாளரின் பதிலில் முதல் வாக்கியத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளரின் கேள்வி மட்டுமே அதில் அடங்கியிருக்கிறது.
இந்தக் காணொளி பழையது என்பதையும், அதில் பழைய பிபிசி வேர்ல்ட் நியூஸ் லோகோ உள்ளது என்பதையும் தெளிவாகக் காணலாம். அந்த லோகவை பிபிசி வேர்ல்ட் நியூஸ் தொலைக்காட்சி இப்போது பயன்படுத்துவதில்லை.
தொகுப்பாளரின் கேள்விக்குப் பதிலளித்த பிபிசி செய்தியாளர், "உண்மையில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் விண்வெளித் திட்டம் மிகவும் சிக்கனமானது.
ஆனால் அதைவிட முக்கியமாக பல முறை கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அது வெற்றியடைந்துள்ளது. இது உலக நாடுகளாலும் பாராட்டப்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திரிக்கப்பட்ட காணொளியை அது தவறானது என்று தெரியாமலேயே, பல பிரபலமான நபர்களும் பகிர்ந்திருக்கின்றனர் அல்லது கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளுள் ஒன்றான ஆஜ் தக்கும் இந்த தவறான காணொளியை ட்வீட் செய்தது.
இது செய்தி சேனலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் அதை நீக்கிவிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்