அமலாக்கத் துறை சோதனை: அமைச்சர் உதவியாளரின் வீட்டு பணியாளரிடம் கிடைத்தது என்ன?

காணொளிக் குறிப்பு, கட்டுக்கட்டாக பணம்; அமைச்சர் PA வீட்டு பணியாளர் வீட்டில் ED Raid-ல் கிடைத்தது என்ன?
அமலாக்கத் துறை சோதனை: அமைச்சர் உதவியாளரின் வீட்டு பணியாளரிடம் கிடைத்தது என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் இவை. ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளரின் வீட்டு பணியாளர் வீட்டில் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, ஜார்க்கண்டில் மலையளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டுளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மே 6ஆம் தேதி அமலாக்கத்துறையில் ஈடுபட்டது. இதில், அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலமின் (AlamGir Alam) உதவியாளர் சஞ்ஜிவ் லாலின் வீட்டு பணியாளரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. ராஞ்சியில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, ஊரக வளர்ச்சி துறையின் தலைமை பெறியாளராக இருந்த விரேந்திர ராம் தொடர்புடைய வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறினார். அரசின் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் மோசடி வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விரேந்திர ராமை அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ஆலம்கிரி ஆலம், சஞ்சீவ் லால் ஒரு அரசு ஊழியர், பணி அனுபவத்தின் அடிப்படையில் ஒருவர் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் தற்கு முன்பு இரு அமைச்சர்களுக்கு உதவியாளராக இருந்துள்ளார், தற்போது என் உதவியாளராக உள்ளார். டிவியை பார்த்தே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். அமலாக்கத்துறை அதன் விசாரணையை முதலில் முடிக்கட்டும், அதன்பிறகு நான் பதிலளிப்பேன்` என்று தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)