You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாட்டரியில் கிடைத்த 2.5 கோடி ரூபாயை இவர் என்ன செய்தார்? 90 வயதிலும் ரிக்ஷா ஓட்டுவது ஏன்?
குருதேவ் சிங். இவரது வயது 90. பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் வசிக்கிறார்.
ரிக்ஷா தொழிலாளியான குருதேவ் சிங் ஏப்ரல் 2023 இல் பஞ்சாப் அரசின் வைசாகி லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றார்.
குருதேவ் சிங்கின் குடும்பம் லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை வென்ற பிறகு அவர்களின் சூழ்நிலை மாறியது.
குருதேவ் சிங்கின் மகனும் மகளும் தங்களின் முந்தைய காலத்தில் வாழ்ந்த மண் சுவர் வீட்டிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனால் குருதேவ் சிங் தனக்கு லாட்டரி பணம் கிடைத்ததால் தான் அதனை வைத்து உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை என்று கூறுகிறார்.
"உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒருவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் ரிக்ஷா ஓட்டுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்தார்?
லாட்டரியில் கிடைத்த பணத்தில் குருதேவ் சிங் தனது நான்கு மகன்கள் மற்றும் மகளுக்கு வீடுகளைக் கட்டினார். அவர்கள் அனைவரும் புதிய வாகனங்களை வாங்கியுள்ளனர். அவரது பேரக் குழந்தைகள் தற்போது சிறந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
"நான் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் நோய்வாய்ப்படுவேன். ரிக்க்ஷா ஓட்டுவதால் எனது தசைகளுக்கு ஒரு உடற்பயிற்சி போல் இருக்கிறது. நல்ல உடற்தகுதியோடு இருக்கிறேன். அது தவிர, நீங்கள் படுக்கையிலேயே சுற்றிக்கொண்டு இருந்தால், விஷயங்கள் எதிர்மறையாக மாறும்" என்று குர்தேவ் சிங் கூறுகிறார்.
லாட்டரியில் பரிசுத்தொகை கிடைத்த பிறகு, குருதேவ் சிங், "நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டும்" என்று கூறினார். பணம் இருக்கிறது என்ற ஆணவத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? குழந்தைகள் கார் வாங்கினர். அதை நான் எதிர்க்கவில்லை.
கடந்த காலத்தில் கூட குழந்தைகள் ஏழ்மையில் இருந்தனர். ஆனால் அவர்களின் வீடு இப்போது நன்றாக இருக்கிறது. என் மகள் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தாள். நான் அவளுக்கு ஒரு புதிய வீட்டைக் கொடுத்தேன். நான் பணத்தை தூக்கி எறியவில்லை. எந்தவொரு சிறந்த வேலைக்கும், பணம் செலவழிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்," என்கிறார் குருதேவ் சிங்.
குருதேவ் சமூக சேவை
குருதேவ் சிங் ஆரம்பம் முதலே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இருப்பினும், அவர் லாட்டரி வென்றதிலிருந்து சமூக சேவைக்கு இப்போது அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்களை அவர் தொடர்ந்து அடைத்து வருகிறார்.
இவர் தனது ரிக்ஷாவில் மண் மற்றும் மண்வெட்டிகளை எடுத்துச் சென்று பள்ளங்களை சரிசெய்வது வழக்கம்.
பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதையும் நிறுத்தவில்லை.
"நான் நீண்ட காலமாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கோடையில் மரங்களுக்கு தண்ணீர் கொடுக்கிறேன். அவற்றைப் பாதுகாப்பாக வைக்க நான் மிகவும் கவனமாக இருப்பேன். குறுக்காக வளரும் மரங்களை நான் ஒழுங்கமைத்து தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பேன் என்கிறார்.
என் வாழ்நாள் முழுவதும், நான் மருந்துகளை உட்கொண்டதில்லை. இதன் விளைவாக, இந்த வேலைகள் எனக்கு பயனுள்ள சிகிச்சையாக உதவுகின்றன, என்கிறார் குருதேவ்.
குருதேவ் சிங்கின் பணியை மக்கள் பாராட்டுகின்றனர்.
குருதேவ் சிங் "தான் எதிர்காலத்திலும் லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து வாங்குவேன்" என கூறினார்.
லாட்டரி பணத்தால் கட்டப்படும் கண் மருத்துவமனை
ராஜ்பால், டாக்டர் ஸ்வரன் சிங் ஆகிய இரண்டு டாக்டர்கள் சில மாதங்களுக்கு முன் லாட்டரியில் ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத் மாவட்டத்தில் ஃபசில்கா என்ற இடத்தில் வசிக்கின்றனர். அவர்கள் இருவரும் கண் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து ஜலாலாபாத்தில் அதிநவீன கண் மருத்துவமனையை கட்டி வருகின்றனர்.
அவர்கள் லாட்டரியில் வென்ற ஐந்து கோடி ரூபாய் வரிப்பிடித்தம் போக 3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அந்த பணத்தில் அங்கே அதிநவீனகண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
"இந்தப் பணத்தை நாங்கள் உபகரணங்கள் மற்றும் நிலம் வாங்க பயன்படுத்தினோம். இந்த தொகை மருத்துவமனை கட்ட போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். இருப்பினும், பணவீக்கம் காரணமாக இந்த பணம் போதுமானதாக இல்லை," என்று அவர் கூறினார்.
லாட்டரி பணம் மருத்துவமனைக்கும், வங்கிக் கடனுக்கும் போதாது
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனையைக் கட்டத் தொடங்குவதற்கு முன்பு வங்கிக் கடனை எதிர்பார்ப்பதாக கூறுகிறார் மருத்துவர் ராஜ்பால்.
"எங்களிடம் உபகரணங்களுக்கான நிதி மற்றும் மருத்துவமனையை அமைப்பதற்கான இடவசதி இல்லை. இருப்பினும், எங்களுக்கு லாட்டரியில் கிடைத்த வெற்றியை ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக மாற்ற முடிந்தது" என்று மருத்துவர் ஸ்வரண் சிங் கூறுகிறார்.
புதிய மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பழைய கண் மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சேவை செய்ய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம் என்றும், இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்களுடன் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.
நாங்கள் தற்போதுள்ள மருத்துவமனைக்கு குறைந்த வாடகை செலுத்துகிறோம், இதனால் நாங்கள் மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் சேவைகளை வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.
மொத்த ஊரும் வெற்றிப் பெற்றது
இந்த இரண்டு மருத்துவர்களும் லாட்டரியில் வென்ற பிறகு, அனைவருக்கும் அவர்களைப் பற்றி தெரியும், அதற்கு முன்பு, யாருக்கும் தெரியாது என கூறினர்.
இந்த லாட்டரி பணம் மருத்துவமனை கட்டும் தனது விருப்பத்தை பூர்த்தி செய்யவில்லை என்று டாக்டர் ஸ்வரண் சிங் கூறினார். இதனால் அதிக லாட்டரி வாங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
"இங்குள்ள மக்கள் சிகிச்சைக்காக தங்களது ஊருக்குச் செல்கின்றனர். அவர்களால் தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை ஏற்க முடிவதில்லை. அதனால்தான் மக்களுக்கு குறைந்த செலவில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்று அவர் கூறினார்.
"முதல் முறையாக லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகையை இருவரும் வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். பொதுமக்களுக்கு உதவுவதில் எப்போதும் ஒன்றாக இருப்போம்" என்று அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
உள்ளூரில் வசிக்கும் விக்ரம் கூறுகையில், "இரண்டு மருத்துவர்கள் மட்டும் லாட்டரியை வெல்லவில்லை முழு ஜலாலாபாத்தும் வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் இங்கு ஒரு நல்ல கண் மருத்துவமனை வேண்டும் என்று மக்கள் எப்போதும் விரும்புகிறார்கள்.
இந்த நகரம் ஜலாலாபாத் நகருக்கு அருகில் உள்ளது. ஆனால், இந்த மருத்துவ வசதிகள் சிறப்பாக இல்லை. இருப்பினும், இங்குள்ள மக்கள் தரமான மருத்துவ சேவையை விரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து அதிக சேவைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)