விஜயகாந்த் மரணம்: மதுரை பூர்வீக வீட்டில் கலங்கிய உறவுகள்
விஜயகாந்த் மரணம்: மதுரை பூர்வீக வீட்டில் கலங்கிய உறவுகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



