இலங்கை: சீதை கோவிலாக மாறிய ராவணனின் அசோக வனம் - எப்படி இருக்கிறது?
சீதையை ராவணன் கடத்தி, அழைத்து வந்ததாக கூறப்படும் அசோக வனத்தில் பிரசித்தி பெற்ற சீதை கோவில் உள்ளது.
ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தி, அழைத்து வந்ததாக கூறப்படும் அசோக வனம், இன்று இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் காணப்படுகின்றது. தற்போது, சீதா எலிய என்று அழைக்கப்படும் இந்த பகுதி, மலையகத்தின் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பதுளை வீதியில் உள்ளது.
இந்த அசோக வனத்தில் ராவணன் சீதையை 11 மாதங்கள் சிறை வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது, சீதையைத் தேடி அனுமான், அவரை முதன்முதலாக சந்தித்த பகுதியில்தான் தற்போதைய சீதை கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் அனுமானின் பாதம் என கூறப்படும் அடையாளமொன்று, சீதை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள கல்லொன்றில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவிலின் மூலஸ்தானத்தில் ராமர் சீதை லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



