பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா இந்திய யூடியூபர்? லேப்டாபில் கிடைத்த முக்கிய தகவல்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கினாரா?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா இந்திய யூடியூபர்? லேப்டாபில் கிடைத்த முக்கிய தகவல்

பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா காவல்துறையினர் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். அதில் ஹரியாணாவைச் சேர்ந்த யூட்யூபரான ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர்.

ஜோதி மல்ஹோத்ராவின் மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்து சில சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 152 ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோதி மல்ஹோத்ரா 'ட்ராவல் வித் ஜோ' (Travel with JO) என்கிற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். ஒரு ட்ராவல் வ்ளாக்கரான (Travel Vlogger) இவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அதனைக் காணொளியாக தன்னுடைய யூட்யூப் சேனலில் பகிர்ந்து வந்துள்ளார். அந்த வகையில் பாகிஸ்தான் சென்று வந்த பல காணொளிகளையும் அவர் பதிவிட்டுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சமயத்தில் இவர் பாகிஸ்தானின் தூதரகத்தின் இரவு விருந்தில் பங்கேற்ற காணொளியைக் கடந்த ஆண்டு மார்ச், 30ஆம் தேதி தனது சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளியின் தொடக்கத்தில், ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி நடத்தப்பட்ட இப்தார் விருந்து விழாவிற்குத் தன்னை அழைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அந்த நிகழ்வில் ஜோதி மல்ஹோத்ரா, 'தானிஷ் ஜி' என்ற நபரைச் சந்திக்கிறார். அவர், ஜோதி மல்ஹோத்ராவை மற்றவர்களுக்கு ஒரு யூட்யூபராக அறிமுகப்படுத்துகிறார். அந்த காணொளியில் உள்ளது படி, பாகிஸ்தானின் உயர் தூதரக அதிகாரிகள், யூட்யூபர்கள் மற்றும் விருந்தினர்களைப் பற்றி இவர் பார்வையாளர்களுக்கு விளக்குகிறார்.

இவரை காவல்துறை கைது செய்த பின், இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இவரது கைது பற்றி காவல்துறை கூறியது என்ன? ஜோதி மல்ஹோத்ரா தரப்பு என்ன கூறுகிறது?

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு