கம்யூனிச சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட சீர்திருத்தம் - என்ன தெரியுமா?
'பூனை கருப்போ வெள்ளையோ
எலிகளை பிடிக்கும் வரை அது முக்கியமில்லை.'
இந்த வாக்கியத்தை எங்கேயோ கேட்டது போல் உள்ளதா? இதற்கும் சீனா தற்போது எந்தளவு கம்யூனிச தேசமாக உள்ளது என்பதற்கும் என்ன சம்பந்தம்?
நிறையவே இருக்கிறது.
இந்த வாக்கியத்தை பிரபலப்படுத்தியது டெங் ஷௌபிங் (Deng Xiaoping). 1970களின் பிற்பகுதியில் சீனாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற உதவியவர்.
சரி, இந்த வாக்கியம் மூலம் அவர் சொல்ல வருவது என்ன?
பொதுவாக, எவ்வித பாதிப்பும் இன்றி ஒரு பொருளாதாரம் இயங்கும்வரை அது நல்ல பொருளாதாரம்தான்.
டெங் "கம்யூனிசம்" அல்லது "சோசலிசம்" என்ற வரையறைகளைப் பின்பற்றுவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, அவர் வலுவான பொருளாதாரத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.
எனவே, 1978ல் சீனாவின் புகழ்பெற்ற கம்யூனிச தலைவர் மா சே துங் இறந்த சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு புதிய பொருளாதார திட்டத்தை டெங் ஷௌபிங் அறிமுகப்படுத்தினார்.
இது சீர்திருத்தமாகவும் புதிய பாதைக்கு வழிவகுப்பதாகவும் அமைந்தது. வரலாற்றில் மிகவும் பாராட்டுதலுக்குரிய பொருளாதார திட்டம் என்று வல்லுநர்களால் இது விவரிக்கப்பட்டது.
ஆனால், இந்த மாற்றம் எவ்வளவு தீவிரமானது என்பதை அறிய, சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.
முழு விவரம் காணொளியில்....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



