காணொளி: 40 வயதில் பைசைக்கிள் கிக் கோல் அடித்த ரொனால்டோ

காணொளிக் குறிப்பு, 40 வயதில் பைசைக்கிள் கிக் கோல் அடித்த ரொனால்டோ
காணொளி: 40 வயதில் பைசைக்கிள் கிக் கோல் அடித்த ரொனால்டோ

சௌதி ப்ரோ லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த 'பைசிக்கிள் கிக்' கோல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ரொனால்டோ அடித்தது ஒரு காரணம் என்றாலும், அது இவ்வளவு அதிகம் பேசப்படுவதற்கான காரணம் அந்த கோலை அடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

முதலில் நன்கு குதிக்கவேண்டும். கால் மேலே செல்லும்போது, உடலைக் கீழே வளைக்கவேண்டும். பின்னர், காலைத் தூக்கி சரியாக கோலை குறிபார்த்து பந்தை அடிக்கவேண்டும். அதுவும் புவியீர்ப்பை ஏமாற்றி காற்றில் இருக்கும் ஓரிரு நொடிகளில் அதைச் செய்திடவேண்டும்.

இது மிகவும் கடினமான விஷயம் என்பதால்தான், அப்படியொரு கோல் அடிக்கும் வீரரை கால்பந்து உலகம் காலாகாலத்துக்கும் நினைவு வைத்துக்கொள்கிறது.

அதேசமயம் 'பைசைக்கிள் கிக்' மூலம் கோலடிப்பது ரொனால்டோவுக்குப் புதிதான விஷயமும் இல்லை.

2024ம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்காக விளையாடிய ஒரு சர்வதேச போட்டியில் போலந்துக்கு எதிராக அப்படியொரு கோல் அடித்தார் ரொனால்டோ. அதேபோல், 2018 சாம்பியன்ஸ் லீக் தொடரில் யுவன்டஸ் அணிக்கெதிராகவும் பைசைக்கிள் கிக் மூலம் கோல் அடித்தார்.

மிகவும் கடினமானதாகக் கருதப்படும் இந்த கோலை இப்போது மறுபடியும் அடித்திருக்கிறார் ரொனால்டோ.

அதுவும் நாற்பது வயதில்!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு