அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியா? எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியா? எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (ஏப்ரல் 16) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அரசு அமைப்பது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி அரசு என்று நாங்கள் சொல்லவில்லை, அதிமுக- பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறோம். அமித் ஷாவும் அதையே கூறினார். மத்திய அரசுக்கு மோதி போல, தமிழகத்திற்கு என எனது பெயரையே அவர் குறிப்பிட்டார். எனவே இதை வேறுமாதிரியாக பார்க்க வேண்டாம்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



