புதிய போர் சூழலை உருவாக்குமா இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையிலான பதற்றம்?
இரானின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு அமைப்பான ஹெஸ்பொலா தொடர்ந்து பல பின்னடைவுகளைச் சமீப காலமாகச் சந்தித்து வருகிறது.
தொலைதொடர்பு கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தலைவர்கள் கொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ஹெஸ்பொலா உறுப்பினர்கள் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்து சிதறி பெரும் பரபரப்பை லெபனான் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் குழுவுக்கு எதிராக காஸாவில் போரை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹெஸ்பொலாவுக்கு எதிராக லெபனானில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு புதிய போர்ச்சூழல் உருவாகுமா? இதனால் ஏற்பட இருக்கும் ஆபத்துகள் என்ன? ஹமாஸைக் காட்டிலும் அதிகம் பலம் பொருந்தியதா இந்த ஹெஸ்பொலா அமைப்பு விரிவாக விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



