டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - என்ன பின்னணி?
டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார்.
அவருக்கு மாநில அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும் மரியாதை போல வரவேற்பும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்ட மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு வருவது இது முதல் முறையாகும்.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









