இஸ்ரேல் - ஹெஸ்பொலா: தீவிரமடையும் மோதல், எச்சரிக்கும் அமெரிக்கா - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு,
இஸ்ரேல் - ஹெஸ்பொலா: தீவிரமடையும் மோதல், எச்சரிக்கும் அமெரிக்கா - என்ன நடக்கிறது?

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. முன்னதாக சனிக்கிழமை இரவில் வடக்கு இஸ்ரேலை நோக்கி டஜன் கணக்கான ராக்கெட்டுகளை ஹெஸ்பொலா ஏவியது.

இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் தனது குடிமக்களை லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. என்ன நடக்கிறது?

இந்த காணொளியில் பார்க்கலாம். சனிக்கிழமை இரவு ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்பைவிட இஸ்ரேலுக்குள் அதிக தூரத்தில் ஹெய்ஃபா துறைமுக நகருக்கு அருகில் ராக்கெட்டுகள் விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் ராணுவ இலக்குகளை தாக்கியதாக ஹெஸ்பொலா கூறுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்பொலாவிற்கு எதிரான தங்கள் தாக்குதல்கள் தொடரும் என்றும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)