ரஷ்யா vs யுக்ரேன் போர் உக்கிரம் - ஜபோரிஷியா அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி ஐ.நா. அமைப்பு கவலை

ரஷ்யா யுக்ரேன் போர்

பட மூலாதாரம், UKRAINIAN PRESIDENCY/HANDOUT

படக்குறிப்பு, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் கோபுரம் ஒன்றில் இருந்து கரும்புகை வெளிவரும் காட்சி
    • எழுதியவர், சோபியா ஃபெரீரா சாண்டோஸ்
    • பதவி, பிபிசி செய்தி

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா என்ற இடத்தில் இருக்கும் மின் நிலையத்தின் அணுசக்திப் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக் கொண்டே வருவதாக, ஐ.நா-வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் அந்த மின்நிலையத்தின் அருகே ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

சர்வதேச அணுசக்தி முகமையின் (International Atomic Energy Agency - IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி, இது குறித்து ‘மிகவும் கவலையுடன்’ இருப்பதாகவும், அணுமின் நிலையத்தைப் பாதுகாக்க ‘எல்லா தரப்பிலிருந்தும் அதிகபட்ச கட்டுப்பாடு’ தேவை என்றும் கூறினார்.

அங்கு நடந்த தாக்குதல் அணுமின் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் நடந்தது. அங்கு அமைந்திருக்கும் அத்தியாவசிய நீர் தெளிப்பான் குளங்களுக்கு அருகில், மீதமுள்ள ஒரே உயர் மின்னழுத்த இணைப்பிலிருந்து சுமார் 100 மீ., தொலைவில் தாக்குதல் நடந்தது.

இந்த ஆலை போரின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் படைகளால் கைப்பற்றப்பட்டது. இங்கு நடந்த தாக்குதலுக்கு ரஷ்யா-யுக்ரேன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

ஆலையின் அருகில் வெடிச்சத்தம்

கடந்த வாரம், ஆலையின் குளிரூட்டும் கோபுரங்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, யுக்ரேனும் ரஷ்யாவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஜபோரிஷியா-வில் நடந்த தாக்குதலை நடத்தியது யார் என்று

லுக்கு யார் காரணம் வேலைநிறுத்தத்தை நடத்தியது யார் என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறவில்லை, ஆனால் ஜபோரிஷியா-வில் நிலைகொண்டிருந்த அதன் குழு, வெடிபொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா விமானத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறது.

"ஆலைக்கு அருகில் பல்வேறு இடங்களில் இருந்து அடிக்கடி வெடிச்சத்தங்கள், தொடர் கனரக இயந்திரத் துப்பாக்கி, துப்பாக்கி, மற்றும் பீரங்கி ஆகியவற்றின் சத்தம் கேட்டுள்ளது," என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜபோரிஷியா மின்நிலையம் மின்சாரம் உற்பத்தி செய்தி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் ஆறு உலைகளும் மூடப்பட்டுள்ளன.

ரஷ்யா யுக்ரேன் போர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 2022-ஆம் ஆண்டு முதல் ஜபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது

என்ன நடந்தது?

யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டின.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார். ஆனால், யுக்ரேன் தாக்குதலால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பு, அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வந்ததாகவும், அணுசக்தி பாதுகாப்பில் இதனால் எந்தவொரு தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய எல்லைக்குள் 30கி.மீ. வரை யுக்ரேனிய படைகள் முன்னேறியுள்ள பின்னணியில் ஜப்போரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி, ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரான எவ்ஜெனி பலிட்ஸ்கி, அணு மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறினார்

அதற்கு யுக்ரேன் தாக்குதலே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், அணுமின் நிலையத்தை சுற்றிலும் கதிர்வீச்சு அதிகரிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார். ரஷ்யாவுக்குள் எல்லை தாண்டி முன்னேறும் யுக்ரேனை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியான விளாடிமிர் ரோகோவ், 'தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது' என்று ஆகஸ்ட் 12-ஆம் தேதி அதிகாலை தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டார்.

2022-ஆம் ஆண்டு முதல் ஜபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு எந்த ஒரு மின் உற்பத்தியும் நடைபெறவில்லை. இங்குள்ள ஆறு அணு உலைகளும் ஏப்ரல் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வெடிப்புகளை தொடர்ந்து, ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வெளி வந்ததாக, அதன் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குளிரூட்டும் கோபுரங்களில் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அணுமின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு அப்போது கூறியது.

எனினும், அணுசக்தி பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு அப்போது தெரிவித்திருந்தது.

"குளிரூட்டும் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது.

ரஷ்ய எல்லைக்குள் புகுந்து யுக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி முதன் முறையாக ஒப்புக் கொண்ட மறுநாள் ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய மூத்த யுக்ரைன் அதிகாரி ஒருவர், நிறுவனத்திடம் கூறுகையில், ரஷ்ய படை தொடக்கத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலான படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

செவ்வாய்கிழமையன்று யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவுக்கு முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து யுக்ரேன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

யுக்ரேன் தாக்குதலை தடுத்த நிறுத்த ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. போர் நடக்கும் குர்ஸ்க் பகுதியில் 76,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

குர்ஸ்க் பகுதியில் இருந்து பாதுகாப்பு தேடி மாஸ்கோ செல்ல விரும்பும் மக்களுக்காக அவசர இரயில் சேவைகள் அளிக்கப்படுகின்றன.

யுக்ரேன் நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக குர்ஸ்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். அங்கே இருநாட்டுப் படைகளுக்கும் இடையே இந்த வார இறுதி வரை சண்டை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரைனின் இந்த தாக்குதல் ஆத்திரமூட்டும் ஒன்று என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த வார தொடக்கத்தில் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)