ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மாணவிக்கு இந்த ஆண்டு என்ன கிடைத்தது?

காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மாணவிக்கு இந்த ஆண்டு என்ன கிடைத்தது?
ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மாணவிக்கு இந்த ஆண்டு என்ன கிடைத்தது?

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி(வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இவரது மாடு பிடிமாடானதைத் தொடர்ந்து, இவருக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆறுதல் பரிசை வாங்க மறுத்த யோகதர்ஷினி, இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் நோக்கத்தோடு தனது காளையைத் தயார் செய்து வந்தார்.

இந்த நிலையில், இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவரது காளை வெற்றிபெற்றது. இதையடுத்து மாணவி யோகதர்ஷினிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு பரிசாக வழங்கினார்.

யோகதர்ஷினி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: