வாக்காளரை தாக்கிய எம்.எல்.ஏ - ஆந்திராவில் என்ன நடந்தது? காணொளி

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் வாக்காளரை தாக்கிய எம்.எல்.ஏ - என்ன நடந்தது? - காணொளி
வாக்காளரை தாக்கிய எம்.எல்.ஏ - ஆந்திராவில் என்ன நடந்தது? காணொளி

ஆந்திராவில், இன்று (திங்கள், மே 13), மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.

தெனாலி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சிவகுமாரை, ஒரு வாக்களர் தடுத்ததையடுத்து, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

தன்னைத் தாக்கிய எம்.எல்.ஏ சிவகுமாரை, வாக்காளர் திரும்பத் தாக்க, எம்.எல்.ஏ-வின் ஆட்கள் வாக்காளரை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ சிவகுமார், தன்னை தாக்கிய வாக்காளர் மது போதையில் பிரச்னை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாக்காளர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறுகிறார்.

ஆந்திராவில் வாக்காளரை தாக்கிய எம்.எல்.ஏ

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)