நேபாள நிலநடுக்கம்: அதிர்ந்த டெல்லி, உயரும் உயிர் பலி - நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, நேபாள நிலநடுக்கம்: அதிர்ந்த டெல்லி, உயரும் உயிர் பலி - நிலவரம் என்ன?
நேபாள நிலநடுக்கம்: அதிர்ந்த டெல்லி, உயரும் உயிர் பலி - நிலவரம் என்ன?

நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியவில் உள்ள மாநிலங்களிலும் உணரப்பட்டது.

பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)