என்.டி.ஆரின் முதுமை காலத்தில் வந்த காதல் ஆந்திர அரசியலை புரட்டிப் போட்டது எப்படி?
என்டிஆரின் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானவை. உலகம் கண்விழிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே அவர் படுக்கையை விட்டு எழுந்து சூரியன் உதிக்கும் முன் வயிறார உணவை உட்கொள்வார்.
என்.டி.ஆரை நன்கு கவனித்து பணிவிடை செய்வதற்காக அவர் எழுவதற்கு முன்பே அவருடைய மனைவி எழுந்துவிடுவார். 1984 இல் அவர் புற்றுநோயால் இறக்கும் வரை இந்த செயல்முறை தொடர்ந்தது.
என்டிஆர் தனிமையை விரும்பும் நபர், அவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் மிகக் குறைவு. அவரைச் சந்தித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள், அவர்களுடன் அவருக்கு வணிக உறவு மட்டுமே இருந்தது.
அவரது பதினொரு குழந்தைகளில், யார் மூத்தவர், யார் இளையவர் அல்லது எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பது கூட என்டிஆருக்கு தெரியாது. அவர் தனது சொந்த உலகத்தில் தொலைந்து போயிருந்தார்.
1995 ஆகஸ்ட் 23 ஆம் தேதி என்டிஆர் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார். ஆனால் எட்டு நாட்களுக்குள் அதிகாரம் அவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டு அவர் முன்னாள் முதல்வரானார்.
என்டிஆர் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி வராமல் இருந்திருந்தால் கூட அவரை ஆட்சியில் இருந்து நீக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு நிறுத்தியிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Lakshmi Parvathi
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



