காணொளி: கிரிக்கெட் போட்டியில் ரெஃப்ரியின் பங்கு என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: கிரிக்கெட் போட்டியில் ரெஃப்ரியின் பங்கு என்ன?
காணொளி: கிரிக்கெட் போட்டியில் ரெஃப்ரியின் பங்கு என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களிடம் கூட கைக்குலுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்.

டாஸ் போடும்போதும் இரண்டு அணியின் கேப்டன்களும் கைக்குலுக்கவில்லை.

பெரும் சர்ச்சையாக இது உருவெடுத்திருக்கும் நிலையில், போட்டியின் நடுவரை போட்டியிலிருந்து நீக்க வேண்டும் என ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறது.

வீரர்கள் கைகுலுக்காததற்கு போட்டி நடுவர் என்ன செய்வார்? ஒரு கிரிக்கெட் போட்டியில அம்பையர் என்ன செய்வார் என நமக்கு தெரியும். ஆனால், போட்டியின் நடுவரின் (Referee) பங்கு என்ன என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்:

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு