ஆமதாபாத்தில் 242 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம் - காணொளி
ஆமதாபாத்தில் 242 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம் - காணொளி
ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் விபத்துள்ளானது.
இந்த விமான இந்திய நேரப்படி பிற்பகல் 1.36 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் உள்பட 242 பேர் இருந்தனர்.
ரன்வேவில் இருந்து கிளம்பிய பிறகு, விமான நிலையத்துக்கு வெளியே விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தது.
இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



