காணொளி: பழைய கார்களை வாங்கும் போது செய்யக் கூடாத தவறுகள்
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என பலருக்கும் கனவு இருக்கும். அதற்கு தேவையான பணம் இல்லாதவர்கள் பழைய கார்களை வாங்குவார்கள்.
அப்படி, பழைய கார் வாங்கும்போது பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலில் ஆவணங்கள்.
பழைய கார்களை வாங்கு,போது ஆர்சி புக், காப்பீட்டில் உள்ள பெயர், முகவரி, உரிமைதாரர் உள்ளிட்டவற்றை மாற்றுவது மிகவும் முக்கியம்.
இல்லையெனில் அந்த கார் மீது செலுத்துச்சீட்டு (challan) அல்லது அபராதம் இருந்தால் அதனால் பெரிய பிரச்னைகள் வரலாம். பிறகு காருக்கு விபத்து ஏற்பட்டால் காப்பீட்டையும் பெற முடியாது.
அதேபோன்று, உங்கள் காரை மற்றவருக்கு விற்கிறீர்கள் என்றால் எல்லா ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். முத்திரை தாளில் கையெழுத்து வாங்கி, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை வாங்கி வைப்பது நல்லது. இல்லையெனில், பிற்காலத்தில் அவர் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாலும் உங்களை அது பாதிக்கலாம்.
அடுத்தது எதற்காக வாங்குகிறோம் என்பது.
என்ன மாதிரி கார் வேண்டும்? காருக்கான உங்கள் தேவை என்ன? தினமும் ஓட்டுவீர்களா? உங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்றதுபோல என்ன கார் வாங்குவது? உங்கள் budget என்ன?
இப்படி இதை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு முடிவு செய்ய வேண்டும்.
அடுத்ததாக காரின் நிலைமை.
ஒரு கார் உங்களுக்கு பிடித்திருந்தால், அதன் நிலைமை பற்றி அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையத்தில் கொடுத்து சர்வீஸ் செய்திருக்கிறார்களா அல்லது வேறு மெக்கானிக்கிடம் கொடுத்து செய்திருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
கடைசியாக, 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிய காரோ, அதிக கிலோமீட்டர் ஓடிய காரோ வாங்கக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



