லெபனான் போர்நிறுத்தம் மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வருமா?
பெரும்பான்மையான லெபனான் மக்கள் போர் நிறுத்தத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ரோமில் நடைபெற்ற மத்திய கிழக்கு மாநாட்டில் என்னுடன் கலந்துகொண்ட ஒரு முக்கிய லெபனான் ஆய்வாளர், திட்டமிடப்பட்ட போர்நிறுத்த நாள் நெருங்கி வருவதால் பதற்றத்தில் தன்னால் தூங்க முடியவில்லை என்றார்.
"எனது குழந்தைப் பருவத்தில் நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த கிறிஸ்துமஸ் மாலை வேளையை இந்த உணர்வு நினைவுபடுத்தியது. போர் நிறுத்த நாளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
லெபனான் மக்களின் இந்த நிம்மதிக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது எளிது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 3,500க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். அதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் சற்றுக் காலத்திற்கு இருக்காது என்பதே இந்த மக்களின் நிம்மதிக்குக் காரணம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



