மனம் தளராமல் படித்து அரசுத் துறையில் சாதிக்கும் பார்வையற்ற பெண்ணின் நம்பிக்கை கதை

காணொளிக் குறிப்பு,
மனம் தளராமல் படித்து அரசுத் துறையில் சாதிக்கும் பார்வையற்ற பெண்ணின் நம்பிக்கை கதை

நேபாளத்தை சேர்ந்த பெண்ணான நீரா அதிகாரி தனது எட்டு வயதில் பார்வையை இழந்தார். ஆனால் அவர் கண் பார்வையை மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவரது நம்பிக்கை ஒருபோதும் நிறைவேறவில்லை.

சிறுவயதில் அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு அவருக்கு கண் பார்வை பறிபோனது. ஆனால், இதற்காக அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை. அவர் பிரெய்லி முறையில் படிக்க கற்றுக்கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். பொதுப்பணித் தேர்வில் இந்த பிரெய்லி முறையில் படித்து அவர் தேர்ச்சி பெற்றார்.

தற்போது 45 வயதான அவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான அமைச்சகத்தில் துணைச் செயலாளராக பணிபுரிகிறார்.

மேலும் அவர் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

அவரைப் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)